தூத்துக்குடி: நாகர்கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவின் மீது போர் தொடுக்கும்போது திரும்ப தாக்குதல் நடத்தவில்லை என்றால் நாம் கோழை. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானின் தவறுகளுக்கு அறத்தின் அடிப்படையில் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அரசின் கீழ் ராணுவம் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து இந்தியாவின் அப்பாவி மக்களை சுடுவார்கள் என்றால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்றொரு நாடு இருக்காது.
இது சாதாரண மக்களுக்கு கூட தெரியும். பாகிஸ்தானை எதிர்ப்பதற்காக அரசியல் வேறுபாடு இன்றி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இருப்பதும், நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசின் பேரணியும் வரவேற்கத்தக்கதாகும். மேலும் பொது இடங்களில் பாதுகாப்பை தமிழக காவல் துறை அதிகரித்துள்ளது. இதுபோன்று தேச பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் பேரணி வரவேற்கத்தக்கது: அண்ணாமலை பாராட்டு appeared first on Dinakaran.
