×

இளம்பெண்ணுக்கு பொதுக்கழிப்பறையில் திடீர் பிரசவம் குழந்தை பலி

திருப்பூர்: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி (30). இவர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணி புரியும் சரவணன் (34), என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இரு வீட்டாருக்கும் தெரிவிக்காமல் பெருமாநல்லூர் சாலையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசிக்கின்றனர். 7 மாத கர்ப்பமாக இருந்த ரேவதி நேற்று இரவு மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் கழிப்பறை பணியாளர்கள் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே மயங்கிய நிலையில் ரேவதி கிடந்தார். அருகில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்து கிடந்தது. ரேவதியை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

The post இளம்பெண்ணுக்கு பொதுக்கழிப்பறையில் திடீர் பிரசவம் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Revathi ,Trichy district ,Saravanan ,Perumanallur Road… ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி...