×

தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளம்: ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

திருமலை:தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: முதலில் ஒரு இந்தியராக, பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும், மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஆயுதப்படைகளின் முயற்சிகளுக்காக தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளத்தை எனது பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

எனது அனைத்து சகாக்கள் மற்றும் கட்சி சகாக்கள், அதேபோல் நல்ல குடிமக்களும் இந்த முயற்சியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது வெற்றியின் மிக தீர்க்கமான தருணம் வரை நாம் அனைவரும் ஒன்றாக, நமது படைகளுடன் ஒன்றாக நிற்போம். ஜெய் ஹிந்த்! ஆபரேஷன் சிந்தூர். இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

The post தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மாத சம்பளம்: ரேவந்த் ரெட்டி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Defence Fund ,Revanth Reddy ,Tirumala ,Telangana ,Chief Minister ,Defence Fund ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...