மதுரை, மே 10: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில், மல்லிகைப் பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை ஆனது.
மேலும் ஒரு கிலோ பிச்சிப் பூ ரூ.600, முல்லை ரூ.500, செவ்வந்தி (ஒசூர்) ரூ.200, சம்பங்கி ரூ.80 முதல் ரூ.100, கனகாம்பரம் ரூ.600, ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.160, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.150, மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்று) ரூ.5 என விற்பனை ஆனது. கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் வரத்து குறைவாக உள்ளதாலும், சித்திரைத் திருவிழா நடைபெற்று வருவதாலும் பூக்களின் விலை சற்று கூடுதலாக உள்ளது. பூக்களின் வரத்தைப் பொறுத்து அடுத்த சில நாட்களுக்கு இதே நிலையில் விலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
The post மல்லிகைப் பூ கிலோ ரூ.1000க்கு விற்பனை சித்திரை திருவிழா எதிரொலி appeared first on Dinakaran.
