×

சுகாதார தயார் நிலைகள் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை

நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களின் தயார் நிலை தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் செய்யப்பட்டுள்ள தயார் நிலை குறித்து அமைச்சர் மற்றும் குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து போர் பதற்றம் நிலவும் சூழலில் மருத்துவமனைகளை, சுகாதார மையங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

The post சுகாதார தயார் நிலைகள் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : J.P. Nadda ,Union Health Minister ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!