×

நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய்: விக்ரம் மிஸ்ரி

டெல்லி: நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்த முடியும் என பாகிஸ்தான் மட்டுமே கூற முடியும் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும் ” நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். மத மோதல்களை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்கிறது. காஷ்மீர் பூஞ்ச்சில் உள்ள குருத்வாராவை தாக்கியது பாகிஸ்தான் படைகள்தான். குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது அற்பதனமான நடவடிக்கை. உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவல்களை கொடுத்து திசை திருப்ப முயற்சி” என எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய்: விக்ரம் மிஸ்ரி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Vikram Misri ,Delhi ,Foreign Secretary ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...