×

வருஷத்துக்கு 2 மாசம்தான் விளையாடுறேன்…ஓய்வு குறித்து தோனி பதில்

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த 57வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய 19.4 ஓவரில் சென்னை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவின்போது சென்னை கேப்டன் தோனியிடன் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, ‘எனக்கு இப்போது 43 வயது ஆகிறது.

நான் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐபிஎல் தொடரில் எனது கடைசி ஆண்டு என்று யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதங்களுக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

 

The post வருஷத்துக்கு 2 மாசம்தான் விளையாடுறேன்…ஓய்வு குறித்து தோனி பதில் appeared first on Dinakaran.

Tags : Dhoni ,Chennai ,Kolkata ,57th league ,IPL ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்...