×

கோட்டை பெருமாள் கோயிலில் தேரோட்டம்

 

சேலம், மே 8: சேலம் பழைய பஸ்ஸ்டாண்டையொட்டி கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, நவராத்திரி, வைகாசி விசாக தேரோட்டம் உள்பட பல்வேறு விழாக்காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஜூன் 9ம்தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவன் கோயில் நடக்கும் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்று, மறுநாள் 10ம் தேதி பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடக்கும். அந்த வகையில், ஜூன் 10ம் தேதி வைகாசி விசாக தேரோட்டத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது என்று கோயில் செயல் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

The post கோட்டை பெருமாள் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kotta Perumal Temple ,Salem ,Kotta Alagiri Nath Swamy Temple ,Vaikunta Ekadashi ,Ram Navami ,Navaratri ,Vaikasi Visakha Therotam ,
× RELATED டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது