×

வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

 

ஊட்டி, மே 8: வனத்துறை சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (9ம் தேதி) ஊட்டி கேர்ன்ஹில் பகுதியில் நடக்கிறது.
நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் ஊட்டி கேர்ன்ஹில் பகுதியில் உள்ள வனத்துறையின் பொருள் விளக்க மைய கட்டிடத்தில் நாளை (9ம் தேதி) காலை 10.30 மணியளவில் நீலகிரி வன கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகள் தங்களது வனத்துறை சார்ந்த குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த கூட்டத்தில் அனைத்து வனச்சரக அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ள பணிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்

The post வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Ooty ,Cairnhill ,Nilgiris Division District ,Forest Officer ,Gautham ,Nilgiris District Forest Department… ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி