×

ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

 

 

உடுமலை,மே8: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெற்றது.
முகாமில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றனர். தினமும் சத்துணவு, பால், பழம் வழங்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாபு தலைமை வகித்தார். எஸ்எம்சி தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். விழாவில் முன்னாள் ஹாக்கி வீரர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும், பயிற்சியாளருமான செந்தில் குமாரவேல் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

The post ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Bedapampatty Government Secondary School ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்