×

கும்மிடிப்பூண்டி அருகே குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் கடும் அவதி

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் கோங்கல் மேடு, மேல்பாக்கம், சித்தூர் நத்தம், அம்பேத்கர் நகர், குமரநாயக்கன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி உள்ள சித்தர் நத்தம் என்ற பகுதியில் பழைய டயர் தொழிற்சாலை, மின் உற்பத்தி தொழிற்சாலை ஆகியவை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வருவதால் ஏற்கனவே இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈகுவார்பாளையம் – சித்தூர் நத்தம் இடையே உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், சித்தூர் நத்தம், ஜி.ஆர்.கண்டிகை, ஐயர் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு வாகனங்களில் செல்லும் முதியோர்கள், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் பள்ளம் இருப்பதை அறியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, குண்டும் குழுயுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Gummidipoondi ,Gongal Medu ,Melpakkam ,Chittoor Natham ,Ambedkar Nagar ,Kumaranayakkan Pettai ,Eekuarpalayam panchayat ,Siddhar Natham ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...