×

திண்டுக்கல்லில் பெயிண்டர் தற்கொலை

 

திண்டுக்கல், மே 8: திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் புது தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் இருதய ஜேசுராஜ் (46). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 11 வயதில் மகனும் உள்ளனர். ஜஸ்டின் இருதய சேசுராஜ், குடும்ப சூழ்நிலை காரணமாக உறவினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை திருப்பி தர முடியாமல் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜஸ்டின் இருதய சேசுராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்ஐ சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் பெயிண்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Painter ,Dindigul ,Justin Udaya Jesuraj ,New Street, Mariyanathapuram West, Dindigul ,Justin Udaya Sesuraj ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...