×

109 மீட்டர் பறந்த சிக்சர் ஜட்டுவின் ஜகஜாலம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, அதிகபட்சமாக 109 மீட்டர் துாரம் சிக்சர் விளாசி சாதனை படைத்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக அந்த சிக்சரை அவர் பறக்க விட்டுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில், மும்பை அணிக்கு எதிராக, சன்ரைசர்ஸ் அணியின் ஹென்ரிச் கிளாசன், 107 மீட்டர் துாரத்தில் விளாசிய சிக்சர் இடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில், டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ரஸல், பஞ்சாப் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் 106 மீட்டர் துாரம் விரட்டியடித்த சிக்சர்கள் 3ம் இடத்தில் உள்ளன. அடுத்த இடத்தில், குஜராத் அணிக்கு எதிராக பெங்களூரு அணி வீரர் பில் சால்ட், ராஜஸ்தானுக்கு எதிராக சன்ரைசர்ஸ் வீரர் டிராவிஸ் ஹெட் விளாசிய 105 மீட்டர் துார சிக்சர்கள் உள்ளன.

The post 109 மீட்டர் பறந்த சிக்சர் ஜட்டுவின் ஜகஜாலம் appeared first on Dinakaran.

Tags : Jattu ,Chennai Super Kings ,Ravindra Jadeja ,IPL ,Bangalore ,Mumbai… ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...