×

சாத்தய்யனார் கோயில் விழாவில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

ஆர்.எஸ்.மங்கலம், மே 8: ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சாத்தனூர் கிராமத்தில் மகா சாத்தய்யனார் கோயில் உள்ளது. எருது கட்டு விழாவை முன்னிட்டு கடந்த ஏப்.30ம் தேதி கோயிலில் காப்பு கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டு தினங்களுக்கு முன் வடம் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று எழுது கட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தும், அலகுகளில் வேல் குத்தியும், பூக்குளித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். விழாவில் சாத்தனூர், கோடனூர், களத்தூர், வாணியக்குடி, பூலாங்குடி, தொண்டி, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு எருது கட்டு விழாவினை கண்டு மகிழ்ந்தனர்.

The post சாத்தய்யனார் கோயில் விழாவில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Kavadi ,Sathayyanar temple festival ,R.S.Mangalam ,Maha Sathayyanar ,Sathanur ,R.S.Mangalam. ,oxen festival ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை