×

இந்திய ராணுவ தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு மசூத் அசார் கைது செய்யப்பட்டார். 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்டது. மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீவிரவாதிகளிடம் பேசி மசூத் அசார் விடுவிக்கப்பட்டு இந்திய விமான பயணிகள் மீட்கப்பட்டனர். இந்திய ராணுவம் பாவல்பூரை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

பாவல்பூரில் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தன்னுடைய அக்கா, அவரது கணவர், சித்தி மகன், அவரது மனைவி, இன்னொரு உறவினர், உறவினர்களுடைய 5 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என மசூத் அசார் தெரிவித்துள்ளார். அதே போல் அசாரின் நெருங்கிய கூட்டாளி, அவரது தாய் , மேலும் 2 கூட்டாளிகள் உயிரிழந்துள்ளனர் என மசூத் அசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து மசூத் அசார் பாவல்பூரை தனது இருப்பிடமாக மாற்றினார். கடந்த 2019ல் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவித்தது. அதற்கு பின்னர் அவர் பொதுவெளியில் அவ்வளவாக நடமாடுவது இல்லை .

 

The post இந்திய ராணுவ தாக்குதலில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Masood Azhar ,Jaish-e-Mohammed ,Maulana Masood Azhar ,India ,Pahalgam terror attack ,PTI ,Dinakaran ,
× RELATED ‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி;...