×

ஆப்ரேசன் சிந்தூர்.. எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை..!!

டெல்லி: ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து 10 மாநிலங்களின் முதலமைச்சர்களோடு அமித் ஷா வீடியோ கான்பிரன்சில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர்கள் மட்டும் அல்லாமல் மாநில டிஜிபிக்களுடனும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன், லடாக் மற்றும் ஜம்முவின் துணை நிலை ஆளுநர்களும் அமித் ஷா உடனான ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post ஆப்ரேசன் சிந்தூர்.. எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Operation ,Home Minister ,Amit Shah ,Delhi ,Operation Sindhur ,India ,Pakistan ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...