×

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

சென்னை : பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹ்லகாமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் பலியாகினர். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ” பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும். நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார். இதே போல், அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,” பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்திய நம் ராணுவத்தைப் பாராட்டுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டு மக்களை காப்பதற்கான நமது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

The post பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Army ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Uddhav Thackeray ,Pakistan ,Bahlakam, Kashmir ,Chief MLA ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள்...