×

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! – ராகுல் காந்தி பதிவு


டெல்லி: தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த ராணுவ நடவடிக்கை பெருமை அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில்; தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியான கொள்கையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்தை எண்ணி பெருமைப்படுகிறோம். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு, ராணுவத்துடன் காங்கிரஸ் துணை நிற்கும் என கூறினார்.

The post இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! – ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Tags : Indian Army ,JAYHIND ,RAHUL GANDHI ,Delhi ,Bahalkam ,Jammu ,Kashmir ,India ,Pakistan ,
× RELATED அமித் ஷாவா, அவதூறு ஷாவா?. தமிழ்நாட்டில்...