×

மும்பைக்கு எதிரான போட்டி குஜராத் த்ரில் வெற்றி: அரை சதமடித்த வில் ஜாக்ஸ்

மும்பை: ஐபிஎல் 18வது தொடரின் 56 லீக் போட்டி, மும்பையில் நேற்று நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணியின் ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரிக்கெல்டன் 2 ரன், ரோகித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 35 ரன் (24 பந்து, 5 பவுண்டரி), வில் ஜாக்ஸ் 53 ரன் (35 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து அடுத்தடுத்து நடையை கட்டினர்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா 1 ரன், திலக் வர்மா 7 ரன், நமன் திர் 7 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். கடைசியில் கோர்பின் பாஷ் அதிரடி காட்ட 20 ஓவர் முடிவில், மும்பை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. கோர்பின் பாஷ் 27 ரன் (22 பந்து, 2 சிக்சர், 1 பவுண்டரி), தீபக் சாஹர் 8 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.

சாய் சுதர்சன் 5 ரன்னிலும் அடுத்த வந்த ஜாஸ் பட்லர் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 14 ஓவர் முடிவில் குஜராத் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கியது பும்ரன் வீசிய பந்து கில் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் போல்ட் பந்து வீச்சில் ஷெர்பேன் ரூதர்போர்ட் 28 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் பும்ரா பந்து வீச்சில் ஷாருக்கான் 6 ரன்னில் வெளியேறினார்.

18 ஓவர் முடிவில் குஜராத் 132 ரன் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, டக்வொர்த் லுவிஸ் விதிகளின் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 6 பந்தில் 15 ரன் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கோட்ஸி, திவாட்டியா ஆடினர். திவாட்டியா ஒரு பவுண்டரி, கோட்ஸி ஒரு சிக்சர் அடிக்க கடைசி 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. 5வது கோட்ஸ் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் அவுட் வாய்ப்பை ஹர்திக் பாண்ட்யா தவறவிட கடைசி பந்தில் இலக்கை எட்டி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

The post மும்பைக்கு எதிரான போட்டி குஜராத் த்ரில் வெற்றி: அரை சதமடித்த வில் ஜாக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Mumbai ,Will Jacks ,season ,IPL ,Mumbai Indians ,Gujarat Titans ,Ryan Rickelton ,Rohit Sharma ,Rickelton ,Dinakaran ,
× RELATED 3 குழந்தைகள் உள்ள நிலையில் பாக்....