×

டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 

திருப்பூர், மே 7: திருப்பூர், சாமளாபுரம் அடுத்த சின்னஅய்யன் கோயில் பிரிவில் நேற்று டிப்பர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னூரை சேர்ந்த தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் லாரி ஒன்று நேற்று டஸ்ட் மண் ஏற்றுவதற்காக அன்னூரிலிருந்து, காரணம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (24) என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது அந்த லாரி சாமளாபுரம் – காரணம்பேட்டை ரோடு, சின்னஅய்யன் கோயில் அருகே வந்த போது திடீரென எஞ்ஜினில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. டிரைவர் பெரியசாமி உடனடியாக லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். டிப்பர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Chinna Ayyan Temple ,Chamalapuram ,Hollow Block ,Annur… ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்