×

கோயில் தாதம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா

 

தா.பழூர், மே 7;அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோயில் தாதம்பேட்டை கிராமத்தில்  பெருந்தேவி நாயகா சமேத  வரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கடந்த 4 ம் தேதி மாலை  பகவத் அனுக்ஞை, புண்யாகவாகனம் ,அங்குரார்ப்பணம் வாஸ்து ஹோமம் நடைபெaற்றது. 6 ம் தேதி காலை சேஷ வாகனத்தில் பரமபதநாதன் சேவை புறப்பாடு நடைபெற்றது. மாலை கருட சேவை புறப்பாடு ஹோமம் திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து நாளை காலை அனுமந்த வாகன புறப்பாடு மாலை திருக்கல்யாணமும் இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. 9ம் தேதி காலை திருத்தேர் புறப்பாடும், தீர்த்தவாரி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சேஷ வாகன வீதியுலாவில் கோயிலுக்கு தாதம் பேட்டை கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வீதி உல நடைபெற்றது. இதில் வீடுகள் தோறும் பொதுமக்கள்  வரதராஜ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

The post கோயில் தாதம்பேட்டை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா appeared first on Dinakaran.

Tags : Brahmotsava festival ,Varadaraja ,Perumal ,temple ,Dadhampettai village ,Tha.Pazhur ,Perundevi Nayaka Sametha ,Varadaraja Perumal Swamy temple ,Ariyalur district ,Varadaraja Perumal temple ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்