×

தமிழ்நாடு சிலை வெளிநாட்டில் ஏலம் விடுவது தடுப்பு

சென்னை: தமிழ்நாடு சிலை தடுப்புப் பிரிவு காவல்துறையின் துரித நடவடிக்கையால், நெதர்லாந்து நாட்டில் கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடப்பட இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த இந்த உலோகச் சிலை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இச்சிலை நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடப்பட இருந்த தகவலை அறிந்த, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் அந்நாட்டு காவல்துறைக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அவசர மின்னஞ்சல் அனுப்பியதை அடுத்து ஏலம் விடுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச்சிலை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் தற்போது இருக்கும் நிலையில், அங்கிருந்து இந்தியா கொண்டுவருவதற்கான சட்ட பூர்வ பணிகள் நடக்கின்றன. தமிழ்நாடு சிலை தடுப்பு |பிரிவினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு சிலை வெளிநாட்டில் ஏலம் விடுவது தடுப்பு appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Chennai ,Tamil Nadu Statue Detention Unit Police ,Netherlands ,NAGAI DISTRICT ,THIRUPUGAZHUR AGNESWARAR TEMPLE ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...