- கொக்கலாடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தெப்பா உற்சாகம்
- திருத்தரைபுண்டி
- திருதுரைபுண்டி
- கொக்கலாடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரி விழா
- திருவாரூர் மாவட்டம்
- அம்மன்
- அம்மன் வீதி
- திருமுத்துராப்பூண்டி
திருத்துறைப்பூண்டி, மே 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலடி
முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த சித்திரை ஒன்றாம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தெடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.தொடர்ந்து முக்கிய திருவிழா கடந்த வெள்ளிகிழமை பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் 6ம் ஆண்டு தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி முத்துமாரியம்மன் வழிபட்டனர். முத்துமாரியம்மன் கோவில் குளத்தில் 4ம் ஆண்டு தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கொக்காலடி கிராமவாசிகள் செய்தி இருந்தனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.
