×

கும்பகோணத்தில் வணிகர் தின கொடியேற்று விழா 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்பு

 

கும்பகோணம், மே 6: குட ந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பேரமைப்பின் துணைத்தலைவர்வேதா ராமலிங்கம் தலைமை வகி த்தார். கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்புரையாற்றி னார். பொருளாளர்கள் மாணிக்கவாசகம், கியாசுதீன், துணைச்செயலாளர் வேதம் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் சோழா.மகேந்திரன் சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் கும்பகோணத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொழில் மற்றும் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிறைவாக துணைச்செயலாளர் அண்ணாதுரைநன்றி கூறினார்.

The post கும்பகோணத்தில் வணிகர் தின கொடியேற்று விழா 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Traders' Day flag ,Kumbakonam ,Kudanthi All Industries Traders' Association Federation ,District Traders' Associations' Federation ,Traders' Day ,Kumbakonam Central Cooperative Bank… ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்