- வடக்காடு முத்துமாரியம்மன் கோயில்
- புதுக்கோட்டை
- வடகாடு முத்துமாரியம்மன்
- கோவில்
- புதுக்கோட்டை மாவட்டம்
- மண்டகபடி…
- தெரோதம்
புதுக்கோட்டை, மே 6: வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் ஆலங்கரிக்கப்பட்ட அம்ன் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அம்மன் வீதியுலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழாவையொட்டி ஆலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். பின்னர், சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் தேர் வடம்பிடித்து, இழுத்தனர்.
தேரோடும் வீதிகள் வழியாக வந்து, தேர் நிலைக்கு வந்தது. இதில், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதான் கலந்துகொண்டார். இரவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.
The post வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.
