- தமிழ்
- கலாச்சார
- மாநாடு
- ஆளுகைத்தல்
- சபை
- அரியலூர் அரியலூர்
- அரிலயலூர்
- தமிழ் கலாச்சார பாரம்பரியம் ஆ
- அரியலூர்
- குழு
- இயக்குநர்களின்
- தமிழ் கலாச்சார பு
- சினி
- பாலகிருஷ்ணன்
- கலாச்சார பாரம்பரியம்
அரியலூர்,மே 6: அரிலயலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடந்தது.
அரியலூரில் தனியார் மண்டபத்தில் தமிழப் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்றக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழப் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்றக்குழு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் புகழேந்தி, அமைப்புச் செயலாளர் நல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சித்ரா பவுர்ணமி அன்று கட்டணமில்லாமல் தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் வகுப்புகள் தொடங்கி நடத்துவது. திருக்குறள் வகுப்பு ஆசிரியர்களாக அரங்க.செங்கொடி, தமிழ்ச்செல்வன், தொல்காப்பியம் வகுப்பு ஆசிரியராக அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் சிற்றரசு, தமிழ்மாறன் ஆகியோர் நியமிக்கப்படுவது. அதே நாளில் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் கதிர்கணேசன் வரவேற்றார். முடிவில் தமிழ்க்களம் இளவரசன் நன்றி கூறினார்.
The post அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்றக்குழு கூட்டம் appeared first on Dinakaran.
