விருதுநகர், மே 6: விருதுநகரில் பாஜ சார்பில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான பாஜவினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பாஜ கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
