×

வைகையில் எச்சரிக்கை பலகைகள்

 

மதுரை, மே 6: மதுரை மீனாட்சி கோயிலின் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும், 12ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, அமெரிக்கன் கல்லூரி சாலையில் மண் மேவப்பட்டுள்ளதுடன், தேவர் சிலை சந்திப்பில் உள்ள பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கல்பாலத்தில் உள்ள இரண்டு தடுப்பணைகளில் நான்கு இடங்களில் பொதுமக்கள் இறங்க தடை விதித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆரப்பாளையம் முதல் விரகனூர் மதகணை முன்பு வரை சுமார் 12 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. கல்பாலம் முதல் தேனூர் மண்டபம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, மண் மேவப்பட்டுள்ளது என நீர்வளத்துறையின் மதுரை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வைகையில் எச்சரிக்கை பலகைகள் appeared first on Dinakaran.

Tags : Vaigai ,Madurai ,Chithirai festival ,Meenakshi Temple ,Kallazhagar ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை