×

வடமதுரை அருகே 1.1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் வாலிபர் கைது

 

திண்டுக்கல், மே 6: வடமதுரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த ஜெயபால்(33) என்பவர், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சுகுணா, சப்-இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார், ஜெயபால் வீட்சில் சோதனை நடத்தினர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

The post வடமதுரை அருகே 1.1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Northam ,Dindigul ,Vadmadurai ,JAYAPAL ,PILATU DISTRICT ,VADAMADURA ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை