தொண்டி, மே 6: கிழக்கு கடற்கரை சாலை தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கின்றனர். அதில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக வாசகங்கள் இடம் பெறுவதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமணம் மற்றும் கோயில் திருவிழாவிற்கு வைக்கப்படும் பேனர்களில், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் சாதி மத அடையாளங்களுடன் வன்முறையை தூண்டும் விதமாகவும் வாசகங்கள் இடம் பெறுகிறது. மேலும் விளம்பர பேனர்களும் தற்போது அதிகளவில் சாலை ஓரங்களில் காணப்படுகிறது. சில இடங்களில் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது.
The post வன்முறையை தூண்டும் வாசகத்துடன் பேனர் வைப்போர் மீது நடவடிக்கை வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
