பாலக்காடு, மே 6: பாலக்காடு மாவட்டம் முதலமடை ரயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை நேற்று ஏற்படுத்தியது. பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரத்தை அடுத்த நன்னியோட்டை சேர்ந்த நாராயணன் தங்கமணி தம்பதி மகன் ராஜேஷ் (48). இவர் நன்னியோட்டி ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ரிக்ஷா டிரைவராக பணியாற்றினார். இவருக்கு கங்கா என்ற மனைவியும், அபிநவ் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டில் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு சென்றவர் முதலமடை ரயில் நிலையம் அருகே திருவனந்தபுரம் சென்ட்ரலிருந்து மதுரை சந்திப்பு வரை செல்கின்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டு அவரது உடலை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் முன்பு குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.
