×

சாத்தூரில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

சாத்தூர், மே 5: சாத்தூரில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை படந்தால் விலக்கு பகுதியில் மேம்பாலம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையை கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு அதிகளவில் உயிர் பலிகள் ஏற்பட்டது. ஆகவே படந்தால் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மத்திய சாலை போக்குவரத்து நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை தொடர்ந்து மத்திய சாலை போக்குவரத்து துறையினர் மேம்பாலம் அமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்து பூமி பூஜையும் முடிந்துள்ளது. நான்கு வழிச்சாலையில் ஆயிரக்கனக்கான வாகனங்க தினமும் சென்று வருவதால் பாலம் அமைக்கும் பணியின் போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக படந்தால் சந்திப்பு பகுதியில் இருபுறங்களிலும் அணுகு சாலையை அகலப்படுத்தும் பணிக்காக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணி திவீரமாக நடந்து வருகிறது.

The post சாத்தூரில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chaturil ,Chaturthi ,Satur ,Madurai ,Kanyakumari ,Four Highways Accident ,Four Highways ,Sathur ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு