×

திங்கள்நகரில் மே தின பொதுக்கூட்டம்

 

திங்கள்சந்தை, மே 5: திங்கள்நகரில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சி சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மணவை கண்ணன் தலைமை வகித்தார். குளச்சல் தொகுதி செயலாளர் கோயில்ராஜ் வரவேற்றார். மாநில செயலாளர் வழக்கறிஞர் மனோகரன், அகில இந்திய குழு பிரதீப்குமார், இனியவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் , ஒன்றிய அரசின் வெறுப்பு அரசியலையும், பாசிச சட்டங்களையும் முறியடித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்.

சாதி மத அரசியலை களைந்து தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என கோஷங்கள் எழுப்பினர். தேரூர் இரட்டை கொலை வழக்கிற்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காவல்துறை மசோதா 2006ஐ சட்டமாக்கி காவலர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்க வேண்டும். அவர்கள் சங்கம் அமைக்க உரிமை வழங்க வேண்டும் என மே தின கோரிக்கை வைத்தனர். நிர்வாகிகள் தனேஷ், ராஜ்மோகன், ஜாண்பிரைட், மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திங்கள்நகரில் மே தின பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : May Day General Meeting ,Mongelnagar ,Marxist Leninist Red Star Party ,MondayCity ,District Secretary ,Manawa Kannan ,Kulachal Constituency ,Koilraj ,State Secretary ,Attorney ,Manokaran ,Mondaynagar ,Dinakaran ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்