- கேரம் சாம்பியன்ஷிப் போட்டி
- திண்டுக்கல்
- கேரம் சாம்பியன்ஷிப்
- மாவட்ட கேரம் சங்கம்
- திண்டுக்கல்லில் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி
- தின மலர்
திண்டுக்கல், மே 5: திண்டுக்கல்லில் மாவட்ட கேரம் சங்கத்தின் 22ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. மாவட்ட அளவில் 10, 12, 14, 16, 18, 21 வயதுகள் மற்றும் சீனியர் ஆண்கள் ஒற்றையர் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகள் என போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 16 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கேரம் சங்க பொருளாளர் மருதமுத்து, மாவட்ட துணை தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில கேரம் சங்க துணை தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரவீன் செல்வக்குமார் நினைவு கேரம் அகாடமி தலைவர் திலீப் மேண்டிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வகுமார் நன்றி கூறினார்.
The post திண்டுக்கல்லில் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி appeared first on Dinakaran.
