×

இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுக்க வேண்டும்:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தீர்மானம்

துபாய்: இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுக்க வேண்டும் என்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் ெசயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்துள்ள நிலையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜாசிம் அல் புதைவி அளித்த பேட்டியில், ‘தெற்காசியாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை பார்க்கும் போது உறுப்பு நாடுகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றன.

பாகிஸ்தான் – இந்தியாவும் உடனடி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும். போர் பதற்றத்தைக் குறைக்க வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. விதிகளுக்கு உட்பட்டு அமைதியான வழிகளில் பிரச்னை தீர்ப்பதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணர வேண்டும். அவ்வாறு செய்யும் போது தான் தெற்காசியாவில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும்.

அனைத்து வகையான தீவிரவாதத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஆதரிக்கும். ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்க்க சர்வதேச சமூகம் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தனது உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

The post இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுக்க வேண்டும்:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : India ,-Pakistan ,Gulf Cooperation ,Dubai ,General Secretary of ,Gulf Cooperation Council ,Bahalkam ,secretary-general ,Jazim al-Mahaiwi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...