×

“தேசியத் கல்வியாளர்கள் உங்கள் தோளுக்குச் சூட்டும் மாலையில்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநிலங்களின் முதலமைச்சர்களே நியமித்துக் கொள்ளலாம் என்ற வரலாற்று உரிமையை உச்ச நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத்தந்த உங்களுக்குக் கல்வியாளர்கள் கூடிப் பாராட்டு விழா நிகழ்த்துவது உங்கள் வெற்றிக்குச் சூட்டும் மகுடமாகும். கண்ணகிக்குப் பெருமை கற்புக்கரசி பெண்களால் பாராட்டப்பட்டதுதான் என்று என்று இளங்கோவடிகள் எழுதினார். அதுபோல் ஒரு ஆட்சித் தலைவருக்குச் சிறப்பு கொண்டாடப்படுவதுதான்.

கல்வியாளர்களால் முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால் இந்த வெற்றியில் மகிழ்ந்து உங்கள் நெற்றியில் இன்னொரு முறை முத்தமிட்டிருப்பார். என் மனம் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டுக்காக தவம்செய்த நீங்கள் இந்தியா முழுமைக்கும் மழைவரம் பெற்றுத் தந்திருக்கிறீர்கள். அதனால் இந்த திருவிழாவாகிறது. விழா ஒரு தேசியத் கல்வியாளர்கள் உங்கள் தோளுக்குச் சூட்டும் மாலையில் நானும் ஒரு பூவாக இருக்கிறேன், வாழ்த்துகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

The post “தேசியத் கல்வியாளர்கள் உங்கள் தோளுக்குச் சூட்டும் மாலையில்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து! appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Vairamuthu ,Supreme Court ,Ministers ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!