×

காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம், மே 3: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. சங்க மாவட்ட தலைவர் உமாராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட பொருளாளர் கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

போராட்டத்தில் அங்கன்வாடி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் கோடை விடுமுறையை முழுமைாக வழங்க வேண்டும். நீண்ட காலம் பணிய செய்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், பல்வேறு குளறுபடியை உருவாக்கும் டிஹெச்ஆர் முறையை முழுவதும் திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram Collector ,Tamil Nadu Anganwadi Employee and Assistant Association ,Umarani ,District Secretary ,Mallika ,District Treasurer ,Kalawati ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை