×

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை, மே 3: ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சகாதேவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை உசிலம்பட்டி அல்லிகுண்டம் கிராமத்தில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓடையில் ஆக்கிரமிப்பு உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். பொதுப்பணி துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, அதனை உறுதி செய்ய வேண்டும். பொதுப்பணி துறையின் உதவி பொறியாளர் சட்ட அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 4 மாதத்திற்குள்ளாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

The post ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,Sahadeva ,Usilampatti ,Court ,Allikundam ,Usilampatti, ,Madurai… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை