×

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 3 ஆண்டுக்கு சஸ்பெண்ட்: கேரள கிரிக்கெட் சங்கம் அதிரடி

கொச்சி:  கேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை 3 ஆண்டுகளுக்கு, கேரள கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவர், இந்திய கிரிக்கெட் அணியில் பல போட்டிகளில் ஆடியுள்ளார். கேரளாவை சேர்ந்தவரும், தற்போது ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருபவருமான சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் கேரள அணியில் சேர்க்கப்படவில்லை.

அதற்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீசாந்த், கேரள கிரிக்கெட் சங்கத்தின் இந்த முறையற்ற நடவடிக்கையால், சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனால் சேர முடியாமல் போனது என குற்றம் சாட்டினார். இதனால் கேரள கிரிக்கெட் சங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கொச்சியில், கடந்த ஏப். 30ம் தேதி, கேரள கிரிக்கெட் சங்கத்தில் சிறப்பு பொதுக் குழு கூடி விவாதித்தது. அதன் அடிப்படையில், ஸ்ரீசாந்தை 3 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக அந்த சங்கம் தற்போது அறிவித்துள்ளது.

The post கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 3 ஆண்டுக்கு சஸ்பெண்ட்: கேரள கிரிக்கெட் சங்கம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sreesanth ,Kerala Cricket Association ,Kochi ,Kerala ,cricket ,Dinakaran ,
× RELATED 2வது முறையாக கடிதம்; போட்டிகளை...