- உயர் நீதிமன்றம்
- ஜிஎஸ்டி ஆணையரகம்
- அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன்
- பொருட்கள் மற்றும்
- தின மலர்
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்துமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரி 285 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 342 ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கும். உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்த சிக்னல்களை நுகர்வோர்களுக்கு வழங்குகிறார்கள்.
நுகர்வோர்களிடமிருந்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில், அரசு கேபிள் டிவி கழகம் கட்டணம் பெறுகிறது. அதற்கான ஜிஎஸ்டி வரி, எந்த பாக்கியும் இல்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் பொறுப்பாகாது. எனவே, 285 கோடியே 4 லட்சத்து 79,342 ரூபாய் வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்ததுது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது. ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 285 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்துமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
The post சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.570 கோடி செலுத்துமாறு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
