
ஈரோடு: ஈரோடு அருகே கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடல்களை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதியை கொன்றவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பாக்கியம்மாள் அணிந்திருந்த 10 சவரன் நகைகள் திருடு போயிருப்பதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
The post இரட்டை கொலை – உடலை பெற உறவினர்கள் சம்மதம் appeared first on Dinakaran.
