- பிரதம செயலாளர்
- ராதாகிருஷ்ணன்
- ராமநாதபுரம்
- ஜெ.ராதாகிருஷ்ணன்
- வழுதூர், ராமநாதபுரம் மாவட்டம்
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர்...
- தின மலர்
ராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், வழுதூர் 196 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய இயற்கை எரிவாயு மின் நிலையத்தினை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டம், வழுதூரில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான 196 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையத்தினை (Gas Turbine Power Plant) தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.
இந்த மின் நிலையத்திற்கு தேவையான இயற்கை எரிவாயு ONGC கிடங்கிலிருந்து நேரடியாக பெறப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் கட்டமைப்பு நிலைத்தன்மை மற்றும் உச்ச மின் தேவை மேலாண்மையில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
இந்த மின் நிலையத்தின் செயல்பாட்டுத் திறன், எரிவாயு கிடைக்கும் நிலை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பராமரிப்புத் திட்டங்களை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், அங்குள்ள மின் நிலையப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மிக சிறந்த மின் உற்பத்திக்கும், முன்னெச்சரிகை நடவடிக்கைக்கும் மற்றும் கோடைகால உச்ச மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங்காஹ்லோன், இ.ஆ.ப., மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா, செயற்பொறியாளர் முத்துவிநாயகம் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ராமநாதபுரத்தில் உள்ள இயற்கை எரிவாயு மின் நிலையத்தினை ஆய்வு செய்தார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்..!! appeared first on Dinakaran.
