×

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனை

சென்னை: தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொதுமக்களை கடிப்பதால் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர்.

தெருநாய்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கருத்தடை செய்வது, கண்காணிப்பு, காப்பகத்துக்கு நாய்களை மாற்றுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

The post தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Chief Secretariat ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...