×

இந்தியாவில் பாக். நடிகர்களின் இன்ஸ்டாகிராம் முடக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பிரபல நடிகர்கள் மஹிரா கான், ஹனியா ஆமீர், அலி ஜாபர் உள்ளிட்டோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதேபோல் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சில பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் சமூக வலைதளங்களும் குறிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது இவர்களின் சமூக வலைதள கணக்குகளை பின்தொடர முடியாதபடி தடை செய்யப்பட்டுள்ளது.

மஹிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத் மற்றும் அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேசா கான், இம்ரான் அப்பாஸ் மற்றும் சஜஸ் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் தடுக்கப்பட்டுள்ளது. இவற்றை இந்திய பயனர்கள் அணுக முயற்சிக்கும்போது, இந்தியாவில் இந்த கணக்கு கிடைக்கவில்லை. சட்டபூர்வ கோரிக்கைக்கு நாங்கள் இணங்கியதால் இது நடந்தது என்ற செய்தி காட்டப்பட்டுள்ளது.

 

The post இந்தியாவில் பாக். நடிகர்களின் இன்ஸ்டாகிராம் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Instagram ,Mahira Khan ,Haniya Aamir ,Ali Zafar ,Indian government ,Pahalgam terrorist attack ,
× RELATED ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின்...