×

மகேஷ்பாபு படத்தில் நடிக்கும் மோகன்லால்

ஐதராபாத்: இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பின்னர் அடுத்ததாக அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் அமேசான் காடுகளில் நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் படம். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மகேஷ்பாபு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்தவுடன் அவர் ராஜமவுலி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் இணைய இருப்பதாக தகவல் பரவியுள்ளது.

ஏற்கனவே மோகன்லாலின் தீவிர ரசிகர் என்று தன்னை பலமுறை ராஜமவுலி கூறி இருக்கும் நிலையில் தற்போது மோகன்லாலை தனது படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களில் மோகன்லாலை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும் படக்குழு ெதரிவித்தது.இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு படத்தில் மோகன்லால் நடிப்பது உறுதியாகிவிட்டது என சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

The post மகேஷ்பாபு படத்தில் நடிக்கும் மோகன்லால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : mokanlal ,mageshbabu ,Hyderabad ,Rajamouli ,Mahesh Babu ,Amazon ,Moganlal ,Maheeshbabu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி