×

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் விவாகரத்து

புதுடெல்லி: கடந்த 2012ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில், 51 கிலோ ஃபிளைவெயிட் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர், மேரி கோம் (43). இவர், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஏழு முறை பதக்கம் வென்றுள்ளார். மேரி கோம், ஹிதேஷ் சவுத்ரி என்ற தொழிலதிபருடன் ரகசிய உறவில் இருப்பதாவகவும், சக குத்துச் சண்டை வீராங்கனையின் கணவருடன் தொடர்பில் இருப்பதாகவும் வதந்திகள் உலவி வந்தன.

இந்நிலையில், கடந்த 2023, டிசம்பரில் பரஸ்பர இணக்கத்துடன், தன் கணவர் கருங் ஓங்கோலரை விவாகரத்து செய்துள்ளதாக, மேரி கோம் நேற்று முறைப்படி அறிவித்தார். இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் எனது தனிமை சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். தேவையற்ற வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

The post ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் விவாகரத்து appeared first on Dinakaran.

Tags : Olympic ,Mary Kom ,New Delhi ,2012 Summer Olympics ,World Boxing Championships ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்