சென்னை: லதா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்து, ‘பாரத சேவா’ என்ற புது முயற்சியை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது, ‘‘இந்த மொபைல் போன் யுகத்தில் நமது இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் இந்திய நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயம் இவற்றின் அருமை பெருமை தெரியாமல் இருக்கின்றனர்.
மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் தங்களது கலாச்சாரம், பாரம்பரியத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி இந்தியாவை நோக்கி வருகிறார்கள். தியானம், யோகா, இயற்கை முறையில் வாழ்வு போன்றவற்றை கடைபிடிக்கிறார்கள். நமது இந்திய நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
The post இந்தியாவின் கலாச்சாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்: இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை appeared first on Dinakaran.
