×

வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப்பின் பூக்குழி திருவிழா: திரளானோர் பங்கேற்பு

சிவகிரி: வாசுதேவநல்லூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக பூக்குழி திருவிழா நடைபெறவில்லை. இதனால் வேதனையடைந்த பக்தர்கள் பூக்குழி திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை மாத பூக்குழி திருவிழா ஏப்.20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மாலையில் கோயில் வளாகத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து தீபாராதனை காட்டிய சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு வேதபாராயண முறையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளர்க்கப்பட்டது. மாலையில் விரதம் இருந்து காப்பு கட்டிய 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக சென்று பின்னர் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினர். முன்னதாக 2 பசுக்கள் பூக்குழி இறங்கின. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சாலை லட்சுமி, சேதுராமன், தாசில்தார் (பொ) மைதீன் பாட்டணி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில், ஏடிஎஸ்பிகள் ராஜ், ஜூலியஸ் கேசர், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவகிரி பாலமுருகன், வாசுதேவநல்லூர் கண்மணி, கடையநல்லூர் ஆடிவேல் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கருப்பையா, மாடசாமி ராஜா ஆகியோர் தலைமையில் தீயணைப்புத்துறையினர் பூக்குழி திடலை சுற்றிலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். 30ம்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

The post வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப்பின் பூக்குழி திருவிழா: திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vasudevanallur Maryamman Temple ,Earthquake Festival ,Maryamman Temple ,Vasudevanallur ,POISON FESTIVAL ,ICOIL ,Ekoil ,Potash Festival ,Pukuzhi festival ,Maryamman ,Temple ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...