×

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கு மத்தியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு கூடும் முதல் பொதுக்குழு கூட்டமாகும். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

* விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

* ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்த் சிலை திறக்க வேண்டும்.

* சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.

* வக்பு சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்

* கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

* மின்சாரம், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி வரியை குறைத்து நெசவாளர்களின் கூலியை உயர்த்துக

* பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உயிரிழப்பு, விபத்துகள் நடக்காத வகையில் மக்களை காக்க வேண்டும்.

The post மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Demutika ,Vijayakanth ,Demutika General Committee ,Chennai ,Executive Committee ,General Committee of the National Progressive Dravita Corporation ,Palakoda, Darumpuri district ,Dinakaran ,
× RELATED வரலாற்று சிறப்போடு நிறைந்த கலாசாரம்...