- பிஆர் காவாய்
- உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதி
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- புது தில்லி
- சஞ்சிவ் கன்னா
- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கண்ணா கடந்த ஆண்டு நவம்பர் 11 அன்று பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் வரும் மே 13 அன்று முடிகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி பி.ஆர்.கவாயின் பெயரை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், பி.ஆர்.கவாயை உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் மே 14 அன்று பி.ஆர்.கவாய் இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக முறைப்படி பதவியேற்பார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். பி.ஆர். கவாய் சுமார் 6 மாதங்கள் மட்டுமே இந்திய தலைமை நீதிபதியாக இருப்பார். அவர் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த பி.ஆர். கவாய், கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையை பெறுகிறார்.
The post உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு, மே 14ல் பதவி ஏற்கிறார் appeared first on Dinakaran.
